-
பெட்ரோல் விலை ரூ.3.75 உயர்வு: விலை கட்டுப்பாடு நீக்கம்!
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை நிர்ணயம் மீதான அரசு கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்வது குறித்து என்று மத்திய அமைச்சரவையின் அதிகாரம் மிக்க அமைச்சர்கள் குழு இன்று முடிவு செய்ததைத் தொடர்ந்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.73 ம், டீசல் லிட்டருக்கு 2 ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 35 ம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிறுவனங்கள் தங்களது விருப்பம் போல் நிர்ணயித்துக் கொள்ளும் வகையில், விலை நிர்ணயம் மீதான தனது கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்வது குறித்து மத்திய அமைச்சரவையின் அதிகாரம் மிக்க அமைச்சர்கள் குழு இன்று கூடி ஆலோசித்தது.
இதில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை நிர்ணயம் மீதான அரசு கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையின் தற்போதைய நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.73 ம், டீசல் லிட்டருக்கு 2 ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 35 ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 3 ம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அமைச்சர்கள் குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த பெட்ரோலியத் துறை அமைச்சக செயலர் எஸ்.சுந்தரேசன், இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக கூறினார்.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை நிர்ணயம் மீதான கட்டுப்பாட்டை அரசு விலக்கிக்கொண்டபோதிலும், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைக் கட்டுப்பாட்டு அதிகாரம் அரசிடமே தொடர்ந்து இருக்கும் என்றும்,பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் மட்டுமே, சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: