• செம்மொழி மாநாடு: ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கக்கூடாது-சு.சாமி

    சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.


    அவரது மனுவில், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500 ஆயுள் தண்டனை கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்பாகவே விடுதலை செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

    ஏற்கனவே அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு 1,405 ஆயுள் தண்டனை கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்னதாகவே சிறையில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில் முடிவு ஏற்படாத நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தினால், அது நீதிமன்ற அவமதிப்பு செயலாக அமையும்.

    எனவே, தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner