-
பாலாஜி சக்திவேலின் 'வழக்கு எண் 18/09'!
காதல், கல்லூரி போன்ற மறக்க முடியாத படங்களைத் தந்த பாலாஜி சக்திவேலின் புதிய படம் இந்த 'வழக்கு எண் 18/09'.
இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் வேகமாக நடந்து வருகிறது.
ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்தப் படத்தையும் பாலாஜி சக்திவேல் இயக்குகிறார். நவீன் ராய் மற்றும் பிரஜ்னா என இரு புது முகங்களை இந்தப் படத்தில் அறிமுகப்படுதிதுகிறார். காதலும் க்ரைமும் கலந்த கதை.
"நான் கதையை கற்பனை செய்வதில்லை. நிஜத்தில் எத்தனையோ கதைகள் உள்ளன. காதலும் கல்லூரியும் அப்படிப்பட்டவைதான். அப்படி மறக்க முடியாத ஒரு கதை இந்த வழக்கு எண் 18/09. இந்தப் படத்துக்காக கேனன் வகை கேமராவைப் பயன்படுத்தியுள்ளோம். விஜய் மில்டன் அற்புதமாக பதிவு செய்துள்ளார்" என்றார் பாலாஜி சக்திவேல்.
இந்தப் படத்துக்குப் பிறகு தனது குரு ஷங்கரின் பேனருக்காக மீண்டும் இயக்குகிறாராம் பாலாஜி சக்திவேல்.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: