• இலங்கை தமிழர் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு



    கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டதையடுத்து தமிழர்கள் வசிக்கும் வன்னி உள்ளிட்ட பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்தி வருகிறார் அதிபர் ராஜபக்சே.

    இந் நிலையில் வன்னி பகுதியில் சீனாவை சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்ததாக தகவல்கள் வருகின்றன. அவர்களுடன் ராஜபக்சேவின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    வன்னி பகுதி முழுவதையும் சுற்றிப் பார்த்த சீன அதிகாரிகள் அங்கு எந்தெந்த இடங்களில் சிங்களர்களுக்கு குடியிருப்புகள் கட்டுவது என்பது பற்றி ஆய்வு நடத்தியதாகத் தெரிறது.

    மேலும் இந்தப் பகுதியில் சீன ராணுவ மற்றும் உளவு கட்டமைப்புகளும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

    ராஜபக்சேவின் கூட்டணியில் இணைந்த 2 தமிழ் எம்பிக்கள்:

    இந் நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 2 தமிழ் எம்.பிக்கள் அதிபர் ராஜபக்சேவின் கட்சியில் இணைந்துள்ளனர்.

    சமீபத்தில் நடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்பிக்களான திகாம்பரம், பிரபா கணேசன் இருவரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினர்.

    இதையடுத்து இருவரும் ராஜபக்சேவின் கூட்டணியில் சேர்ந்து விட்டதாக அறிவிப்பு வெளியானது.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு தான் தேர்தலில் வெற்றி பெற்றோம். எனினும், அந்த கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. அதனால் தான் ஆளும் கூட்டணியில் சேர்ந்துள்ளோம். இனி அதிபருடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்வோம் என்றனர்.

    அமெரிக்கா ஆலோசனை கூற தகுதியில்லை-அமைச்சர்:

    இதற்கிடையே ஆப்கானிலும் ஈரானிலும் 11 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இலங்கைக்கு ஆலோசனை கூற தகுதியில்லை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

    ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்தவரான அவர் நிருபர்களிடம் இவ்வாறு கூறினார்.

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner