-
ஈவிகேஎஸ் இளங்கோவனை பீர் பாட்டிலால் குத்த முயற்சி-பரபரப்பு
சென்னை: சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனை பீர் பாட்டிலால் ஒருவர் குத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் நேற்று காமராஜர் பிறந்த தின விழாவைக் கொண்டாடினர் அப்பகுதி காங்கிரஸார். இதில் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். திமுகவையும், மு.க.அழகிரி, சமீபத்தில் திமுகவுக்கு வந்து சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரையும் கடுமையாக சாடிப் பேசினார். முதல்வர் கருணாநிதியையும் அவர் விடவில்லை. கருணாநிதியின் பல ரகசியங்களை வெளியிட வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இளங்கோவன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் உடைந்து போயிருந்த பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அவரை குத்துவதற்காக பாய்ந்தார். இதைப் பார்த்த தொண்டர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் விசாரணை நடத்தியபோது, பீர் பாட்டிலுடன் பாய்ந்தவர் பெயர் ஆறுமுகம் என்றும், ஈக்காட்டுத்தாங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. குடிபோதையில் அவர் இருந்தாராம்.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: