• சுதந்திர தின பாதுகாப்பு: சென்னை-திருச்சி விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை



    சென்னை: சுதந்திர தின பாதுகாப்பு  காரணங்களுக்காக சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களுக்குள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் பார்வையாளர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த தடை உத்தரவு  அமுலுக்கு வந்தது. விமான நிலையத்துக்குள் நுழைவு டிக்கெட் வாங்கி பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவது வழக்கம். தற்போது இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் நுழைவு டிக்கெட் விற்பனையும் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் விமான நிலைய போர்டிகோ வரை மட்டுமே பார்வையார்கள் செல்ல முடியும். அதே போல திருச்சி  உள்பட பல விமான நிலையங்களிலும் இந்தத் தடை விதி்க்கப்பட்டுள்ளது.

    வரும் 20ம் தேதி வரை தடை நீடிக்கும் என்று தெரிகிறது

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner