• லோக்சபாவில் முதல் முறையாக கேள்விகளுக்குப் பதிலளித்தார் அழகிரி


    டெல்லி: மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி  முதல் முறையாக நேற்று லோக்சபாவில் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

    ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் பேச முடியும் என விதிகள் உள்ளன. இதனால் மு.க.அழகிரியால் லோக்சபாவில் பேச முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் நாடாளுமன்றத்திற்குப் போவதையே தவிர்த்து வந்தார். இது பெரும் சர்ச்சையானது.

    இதையடுத்து புதிய தீர்வு ஒன்றை லோக்சபா சபாநாயகர் மீரா குமார் முன்வைத்தார். அதன்படி பிரதான கேள்விகளுக்கு பதில்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு அதை அழகிரி வாசிக்கலாம். துணைக் கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளிக்கலாம் என்று தெரிவித்தார்.

    இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. நேற்று லோக்சபாவில் மு.க.அழகிரி முதல் முறையாக பேசினார். அந்த வகையில் இது கன்னிப் பேச்சாக அவருக்கு அமைந்தது.

    நேற்றைய கேள்வி நேரத்தின்போது பிரதான கேள்விக்கு அழகிரியை பதிலளிக்க அழைத்தார் மீரா குமார். உடனடியாக எழுந்த அழகிரி, கேள்வி எண் 161க்கான பதில் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதன் பின்னர் அது தொடர்பான துணைக் கேள்விகளுக்கு அழகிரியிடம் அனுமதி பெற்று ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளித்தார்.

    தொடர்ந்து பல்வேறு பிரதான கேள்விகளுக்கும் அழகிரி பதிலளித்தார்.

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner