-
மலையாளத்தில் தாகூராக நடிக்கிறார் அமிதாப்
மலஹாசனைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் மலையாளப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் இந்திய தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூராக அமிதாப் நடிக்கிறார். சமீப காலமாக தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதில் அமிதாப் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழில் ஒரு படத்தில் நடிக்க அமிதாப் திட்டமிட்டிருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலையாளத்தில் மோகன் லாலுடன் இணைந்து அமிதாப் பச்சன் நடித்த கந்தஹார் என்னும் படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில் ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் மலையாளப் படத்தில் தாகூர் வேடத்தில் அமிதாப் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நோபல் பரிசு பெற்ற பின் தாகூரின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக வைத்தே இப்படம் எடுக்கப்பட உள்ளது. ரசிகர்களிடம் இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் இந்த படத்திற்கு "சவுண்ட் ஆஃப் சைலன்ஸ்" என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மோகன்லாலும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: