• அப்போ 'தோழி'... இப்போ 'செல்லம்'!


    சில தினங்களுக்கு முன் சென்னையில் தனது இனிது இனிது படத்தின் பாடல் வெளியீட்டின் போது தனது காதலி போனி வர்மாவை பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்திய பிரகாஷ் ராஜ், ' இவர் என் தோழி.. ஜஸ்ட் பிரண்ட்' என்று கூறினார்.

    உடனே போனி வர்மாவிடம், பிரகாஷ் ராஜ் உடனான உறவு குறித்துக் கேட்டதற்கு, 'இந்தப் படத்தின் ஒரு பாட்டுக்கு நான் நடனம் அமைத்திருக்கிறேன். அவ்வளவுதான். வேறு எதைப் பற்றியும் பேசத் தேவையில்லை' என்று கூறிவிட்டுச் சென்றார்.

    அடுத்த இரு தினங்களில் பிரகாஷ் ராஜும் போனி வர்மாவும் மீண்டும் மேடையில் தோன்றினர். பிலிம்பேர் விருது வழங்கும் விழா அது.

    போனி வர்மாவுடன் ஜோடியுடன் மேடைக்கு வந்த பிரகாஷ் ராஜ், "இப்போது நான் ஒரு முக்கிய நபரை அறிமுகப்படுத்துகிறேன். செல்லம்... இதோ என் செல்லம்!" என்று போனி வர்மாவைக் கைகளால் அணைத்தபடி காட்ட, 'ரொம்ப முக்கியம்' என்று முணுமுணுத்தனர் பார்வையாளர்கள்!

    வரும் 24-ம் தேதி இருவருக்கும் மும்பையில் திருமணமாம்!

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner