• 3 இடியட்ஸ் ரீமேக்கின் 3வது ஹீரோ ஜீவா

    தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள பாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படமான 3 இடியட்ஸ் படத்தில் நடிகர் ஜீவா நடிக்க உள்ளார். 3 கதாநாயகர்களைக் கொண்ட படம் 3 இடியட்ஸ். இப்படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக விஜய் நடிப்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. மற்ற இரு கதாநாயகர்களாக மாதவனும், சிம்புவும் நடிக்க இருப்பதாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் அவர்கள் மறுத்ததால் பாய்ஸ் சித்தார்த் நடிப்பார் என கூறப்பட்டது. இருப்பினும் 3 ஹீரோக்களில் ஒருவராக சிம்புவை நடிக்க வைக்க தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்க சித்தார்த்தும் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதால், அவர் நடிக்க இருந்த கேரக்டரில் தற்போது ஜீவா நடிக்க உள்ளதாக 3 இடியட்ஸ் ரீமேக் படக்குழுவினர் பேசி வருகின்றனர்.இப்படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்குகிறார்.

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner