• விஜய்க்கு மட்டும்தான் நான் தங்கச்சி-சரண்யா மோகன்




    விஜய் படம் என்பதால்தான் நான் அவருடைய தங்கச்சி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்கிறார் விஜய்யின் புதுத் தங்கச்சியான சரண்யா மோகன்.

    தங்கச்சி வேடத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் பிரபலமானார் சரண்யா மோகன். நயனதாராவின் தங்கச்சியாக நடித்தவர் இப்போது விஜய்யின் தங்கச்சியாக நடிக்கப் போகிறார் வேலாயுதம் படத்தில்.

    அதென்ன உங்களுக்கும், தங்கச்சி வேடத்திற்கும் அப்படி ஒரு பொருத்தம் என்று கேட்டால்,

    தமிழ் சினிமாவுக்கும் எனக்கும் அப்படியொரு ராசி போல. வெண்ணிலா கபடி குழு படத்துக்குப் பின் தெலுங்கில் நிறைய படங்கள் நடித்தேன். ஆனால் அங்கு தங்கச்சியாக நான் நடித்ததே இல்லை. ஹீரோயினாக ம்ட்டுமே நடித்தேன் (தெலுங்கில் யாரையும் தங்கச்சியாக பார்க்க மாட்டார்களோ...)

    ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும்தான் என்னை தங்கச்சியாகவே பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு எப்போதுமே கடமைப்பட்டு இருக்கிறேன். எப்போதுமே தமிழ் ரசிகர்களை மறக்க மாட்டேன்.

    இப்போது விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் நான் அவருடைய தங்கையாக நடிக்கிறேன். இந்த கேரக்டரை எனக்காகவே உருவாக்கினார்களாம். விஜய்க்காகவே இந்த தங்கை வேடத்தை ஏற்றுக் கொண்டேன்.

    பாச மலர் படத்தில் வருவது போன்ற அண்ணன் தங்கை வேடமாம் இது. அந்த அளவுக்கு நானும், விஜய்யும் ஒருவர் மீது ஒருவர் பாசத்தைப் பொழிவோமாம். கேட்கவே நெகிழ்ச்சியாக இருந்தது. அதனால்தான் இந்தப் படத்தை ஒப்புக் கொண்டேன். தமிழ் சினிமா என்னிடம் எதிர்பார்ப்பதைக் கொடுக்கிறேன். வேலாயுதத்தில் என் கேரக்டர் பிடித்திருந்தது என்று கூறி நிறுத்தினார் சரண்யா.

    ஆனால் இந்தப் படத்தோடு தங்கச்சி வேடத்துக்கு குட்பை சொல்லப் போகிறாராம் சரண்யா. இனிமேல் நாயகியாக மட்டுமே நடிப்பாராம்

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner