-
1 லட்சத்தை தாண்டிய பி.இ. மாணவர் சேர்க்கை: குறைந்த கட்-ஆப் மார்க் எடுத்தவர்களுக்கும் வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. 3 கட்டமாக நடந்து வரும் இந்த கவுன்சிலிங் 8ம் தேதி நிறைவடைகிறது.
இன்று வரை நடந்த கவுன்சிலிங் மூலம் 1,07,700 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நேற்று வரை 96,913 பேர் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் கட்-ஆப் மார்க் 92க்கு கீழ் எடுத்த மேலும் 8,000 ஆயிரம் பேரையும் கவுன்சிலிங்குக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடுத்த வாரம் கவுன்சிலிங் நடக்கிறது.
இதில்தான் புதிய கல்லூரிகளின் இடங்கள் இடம் பெறும். இந்த கவுன்சிலிங்கிற்கு பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்து பின்னர் உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பங்கேற்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: