-
புதிய கட்டணம் அடுத்த கல்வியாண்டில் அமல்: கோவிந்தராஜன் குழு அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை * உயிர் காக்க உதவுங்கள் * அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் * ராமேஸ்வரம் தீவை குறிவைக்கும் இலங்கை * இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் * அரசு பணியாளர்களுக்கு எதிராக செயல்பட்டவர் ஜெ., : கருணாநிதி * உயிர் காக்க உதவுங்கள் * அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை : ராமதாஸ் * அரசு பணியாளர்களுக்கு எதிராக செயல்பட்டவர் ஜெ., : கருணாநிதி * ராமேஸ்வரம் தீவை குறிவைக்கும் இலங்கை * இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் * தினந்தோறும் உடற்பயிற்சி செய்தால் லோ பிரஷர் குறையும் * மீண்டும் மின்சார மீட்டர் தட்டுப்பாடு * அரசுப் பள்ளிக்கு மாறும் தனியார்பள்ளி மாணவர்கள்: ஆங்கில பயிற்சியால் மாற்றம் * மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முற்றுகை * மம்தா - மாவோயிஸ்டுகள் அணி; மார்க்சிஸ்ட் கடும் சாடல் இ-பேப்பர் AAnmeegam News
சென்னை : "மேல்முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், அடுத்த கல்வியாண்டில் (2011-12) புதிய கட்டணத்தை அமல்படுத்தலாம்' என, கோவிந்தராஜன் குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் நிலைமை என்ன என தெளிவு படுத்தப்படாததால் பெற்றோர்களும்,பள்ளி நிர்வாகங்களும் குழம்பியுள்ளன.
தனியார் பள்ளிகள் பல்வேறு விதமாக வசூலிக்கும் கட்டணங்களை முறைப்படுத்தி, பெற்றோர்கள் - பள்ளி நிர்வாகங்கள் ஏற்கும் வகையில், நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க, கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழு நிர்ணயித்த கட்டணத்தை ஏற்க மறுத்து, 6,500 பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தக்கோரி மேல் முறையீடு செய்தன. பல பள்ளிகள் பழைய கட்டணத்தையும், விருப்பம்போல் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்தியும் கட்டணங்களை வசூலித்து விட்டன. இந்நிலையில், மேல் முறையீடு செய்த பள்ளிகள், புதிய கட்டணத்தை எதிர்பார்த்து இருந்தன. குழுவின் அறிவிப்பு வந்தால், கட்டணம் குறையலாம் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், புதிய கட்டண அறிவிப்பு இழுபறியாக இழுத்துக்கொண்டே இருந்தது.
இந்நிலையில், கோவிந்தராஜன் குழு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், 4,534 பள்ளிகள், குழு அறிவித்த கட்டணத்தை ஏற்றுக் கொண்டன. ஆனால், 6,400 பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து, அதற்கான காரணங்களை கூறி, கட்டணத்தை மீண்டும் மறு நிர்ணயம் செய்யக் கோரின. இந்த பள்ளிகளின் கோரிக்கையை பரிசீலிக்கும் அதே நேரத்தில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை குழு கருத்தில் கொண்டுள்ளது. எனவே, மேற்கண்ட பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து, பள்ளிகளை தர நிர்ணயம் செய்து, அதனடிப்படையில் கட்டணத்தை நிர்ணயம் செய்வதைப்பற்றி முடிவெடுக்க காலஅவகாசம் தேவைப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் புதிய கட்டணத்தை, 2011-2012ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தலாம் என குழு முடிவெடுத்துள்ளது. இவ்வாறு குழு அறிவித்துள்ளது.
மேலும், மேலும் குழப்பம்: இதோ, அதோ என இழுத்துக் கொண்டிருந்த புதிய கட்டண அறிவிப்புக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், குழப்பம் அதிகரித்துள்ளது. ஏராளமான பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்காததால், முதலில் நிர்ணயித்த கட்டணத்தின்படி, அந்த பள்ளிகள் கட்டணம் வசூலிக்க வேண்டுமா, அல்லது கூடுதல் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாமா என்பதை அரசு தெளிவு படுத்த வில்லை. கட்டண அறிவிப்புக்கு முன் பள்ளிகள் வசூலித்த கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாமா என்பதையும் தெளிவு படுத்த வில்லை. இதனால் பெற்றோர்களும், பள்ளி நிர்வாகங்களும் குழப்பம் அடைந்துள்ளன. இது குறித்து விளக்கம் கேட்க குழு தலைவர் கோவிந்தராஜனிடம் பள்ளி நிர்வாகங்கள், பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்கள் தொடர்பு கொள்ள முயன்றன. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: