• எங்கே பாலகுமாரன்?: கொல்லப்பட்டாரா? மறைக்கப்பட்டாரா?


    தழிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான பாலகுமாரும் யோகியும் கொல்லப்பட்டார்களா அல்லது மறைவிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்பது இன்னமும் தெரியவில்லை.

    எனவே அவர்களை உடனே கொண்டு வர வேண்டும் என்று கோரும் ஆட்கொணர்வு மனுவை அவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்ய உள்ளனர்.

    வன்னியின் இறுதி யுத்தத்தின்போது, படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோரின் மனைவிமார் தற்போது கணவர்மாரை இழந்தவர்கள் என இலங்கையின் அமைச்சர் டியூ குணசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

    ஆனால் இதில் உண்மையில்லை என்றும், பாலகுமாரன், யோகி, பாலகுமாரின் மகன் உள்ளிட்டோர் படையினரால் ரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சில அமைப்புகள் தெரிவித்துள்ளன.

    இந்த முரண்பட்ட தகவல்களில் உள்ள உண்மையைக் கண்டறிய புலிகளின் முக்கிய உறுப்பினர்களது உறவினர்கள் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்

    இந்த மனுக்கள் வரும் வாரம் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தாக்கல் செய்யப்படவுள்ளன.

    இந்த மனுத்தாக்கல்களுக்கு சில மனிதாபிமான அமைப்புகளும் உதவ முன்வந்துள்ளன.

    சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கொன்று ஏற்கெனவே போர்க்குற்ற விசாரணை வளையத்தில் இலங்கை மாட்டிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாலகுமாரன், யோகி போன்றோருக்காக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யவிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner