• சமையல் கேஸ் சிலிண்டர்: இனி 21 நாள் காத்திருக்க தேவையில்லை


    சென்னை: வீடுகளுக்கு சமையல் கேஸ் பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக சிலிண்டர் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

    சிலிண்டர் வாங்கிய நாளில் இருந்து குறைந்தது 21 நாட்களுக்குப் பிறகு தான் புதிய சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியும். அதன் பிறகு சிலிண்டர் வந்து சேர 3 நாட்கள் முதல் 3 வாரம் வரை ஆகும்.

    இந் நிலையில் 21 நாட்கள் இடைவெளி இல்லாமல் உடனே அடுத்த கேஸ் சிலிண்டருக்கு பதிவு செய்வதை அனுமதிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

    பதிவு செய்தவர்களின் வரிசைப்படி சிலிண்டர்கள் வழங்கப்படும்.

    அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் யாராவது வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் சிலிண்டர்கள் வாங்கினால் அதை கேஸ் சப்ளை ஏஜெண்டுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    வீடுகளுக்கான சிலிண்டர்கள் தவறாக பயன்படுத்துப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner